1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin fell to Dhinakaran for CM post, Jayakumar

ஸ்டாலின் தினகரன் காலில் விழுகிறார்; அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின்
தமிழகத்திற்கு எப்படியாவது முதல்வராகிவிட வேண்டும் என ஸ்டாலின் தினகரன் காலில் விழுகிறார் என நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


 

 
டெல்லியில் உள்ள தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அதில் அவர் கூறியதாவது:-
 
சபாநாயகர் நடவடிக்கையை விமர்சிக்க கூடாது. சபாநாயகர் உத்தரவில் யாரும் தலையிட முடியாது. ஜெயலலிதா ஆசியுடன் நடைபெறும் ஆட்சியை கலைக்க ஸ்டாலினும் தினகரனும் இணைந்து கூட்டுச்சதி செய்கின்றனர்.
 
முதல்வராகிவிட வேண்டும் என்ற ஆசையில் ஸ்டாலின் தினகரன் காலில் விழுகிறார். கட்சியில் எந்த குழப்பமும் இல்லை. ஆட்சி நன்றாக நடைபெறுகிறது என்றார். மேலும் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெறவே டெல்லி வந்துள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றார்.
அடுத்த கட்டுரையில்
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லாது - முன்னாள் சபாநாயகர்