தொடர்புடைய செய்திகள்
- நாளை முதல் கடுமையான ஊரடங்கு, சந்தைகளில் கூட்டம்! – எகிறிய காய்கறி விலை!
- வெளியூர்களுக்கு சென்னையில் இருந்து இன்று கிளம்பும் கடைசி பேருந்துகள் குறித்த தகவல்!
- மாஸ்டர் குழுவினருடன் மீண்டும் இணைய ஆசை !
- லத்திஃபா: இன்ஸ்டாகிராமில் பதியப்பட்ட பல மாதங்களாக காணாமல் இருந்த துபாய் இளவரசியின் புகைப்படம்
- உடல் எடை குறைய எளிய குறிப்புகள்.....!!
லீவு விட்ட மாதிரி வெளியே சுத்தி வறாங்க..! – முழு ஊரடங்கு குறித்து முதல்வர் விளக்கம்!
தமிழகத்தில் நாளை முதல் முழு முடக்கம் அமல்படுத்தப்படும் நிலையில் அதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த இரண்டு வாரமாக தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் இருந்து வந்தது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு குறித்து விளக்கமளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்வதற்காக தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் பலர் விடுமுறை அளித்தது போல அவசியமின்றி வெளியே சுற்றி வருகின்றனர். கொரோனா சூழலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் உயிரை பொருட்படுத்தாது பாடுபட்டு வருகின்றனர்.
முன்கள பணியாளர்களுக்கு இதற்கு மேல் அழுத்தத்தை கொடுக்க முடியாது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கப்படாததால் மனஅழுத்தம் உருவாக கூடும், விரைவில் அவர்கள் கல்விக்கான வழியையும், எதிர்காலத்தையும் உருவாக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
