1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

வெளியூர்களுக்கு சென்னையில் இருந்து இன்று கிளம்பும் கடைசி பேருந்துகள் குறித்த தகவல்!

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஊரடங்கு உத்தரவு கிடையாது என்பதும் அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்றும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
 
இதனை அடுத்து நேற்று மதியம் முதலே வெளியூர் செல்பவர்கள் பலர் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு படையெடுத்து பேருந்துகளில் சென்றனர். பொதுமக்களின் வசதிக்காக நேற்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று விடிய விடிய சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட்ட நிலையில் இன்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் நாளை முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை அடுத்து இன்று இரவு கிளம்பும் கடைசி பேருந்து குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்
 
* சென்னையில் இருந்து இன்று மார்த்தாண்டத்துக்கு இரவு 6 மணி
 
* சென்னையில் இருந்து இன்று நாகர்கோவில், தூத்துக்குடிக்கு இரவு 7 மணி
 
* சென்னையில் இருந்து இன்று செங்கோட்டைக்கு இரவு 7.30 மணி
 
* சென்னையில் இருந்து இன்று நெல்லை, திண்டுக்கல்லுக்கு இரவு 8 மணி
 
* சென்னையில் இருந்து இன்று மதுரைக்கு இரவு 11.30 மணி
 
* சென்னையில் இருந்து இன்று  திருச்சிக்கு இரவு 11.45 மணிக்கு