திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 23 மே 2021 (09:24 IST)

காய்கறி விலையை உடனே குறைக்க வேண்டும்: வியாபாரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

நாளை முதல் ஒரு வாரத்திற்கு காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறக்க அனுமதி இல்லை என்பதால் இன்றே ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்க பொதுமக்கள் காய்கறி கடைகளில் குவிந்து வருகிறார்கள்
 
காய்கறி தேவையை பயன்படுத்தி காய்கறிகள் விலை இருமடங்கும், ஒருசில காய்கறிகளின் விலையை மும்மடங்காக உயர்ந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
 
மேலும் காய்கறிகளை செயற்கையாக கூடுதல் விலைக்கு விற்பது மக்களை சுரண்டும் செயல் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த எச்சரிக்கையை அடுத்து காய்கறிகள் விலை குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்