செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (11:15 IST)

வேலை இல்லா விரக்தியில் கணவன் தற்கொலை! – மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் திருமணமான நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் சிந்த்வாரா பகுதியை சேர்ந்தவர் சதீஷ் பிஜாடே. பி.டெக் படித்த இவருக்கு சில ஆண்டுகள் முன்னதாக சமோட்டா தில்வாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. சமோட்டா வன அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக சதீஷ் வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். சதீஷ் வேலை இல்லாமல் இருந்ததால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை எழுந்து வந்துள்ளது. இதனால் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் வேலை இல்லாததால் விரக்திக்கு உள்ளான சதீஷ் தனது மனைவிக்கு “நான் போகிறேன். நீ வேலை பார்க்கும் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்” என்று வாட்ஸப் மெசேஜ் அனுப்பியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி சதீஷ்க்கு போன் செய்துள்ளார்.

ஆனால் போனை அவர் எடுக்காததால் போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்று பார்த்த போலீஸார் சதீஷ் தூக்கி பிணமாக தொங்குவதை கண்டுள்ளனர். அவர் உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.