திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 20 அக்டோபர் 2018 (09:00 IST)

நான் ரெடி அவர் ரெடியா? சவால் விடும் அமைச்சர் உதயகுமார்

தமிழக் அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை யார் விமர்சித்தாலும், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமானர் உடனே அதற்கு பதிலடி கொடுத்துவிடுவார். அதே வழியில் அமைச்சர் உதயகுமாரும் செயல்பட்டு வருகிறார். 
 
மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன், கருணாஸ், சமீபத்தில் விஜய் என யார் யார் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை விமர்சிக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். தர்போது இவர் தங்க தமிழ்செல்வனுக்கு சவால் விட்டுள்ளார். 
 
அமைச்சர் உதயகுமார் பேசியது பின்வருமாறு, முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்களை மாற்றினால் அதிமுக, அமமுக இணைப்புக்கு தயார் என்று டிடிவி.தினகரன் கூறுவது வாய்ஜாலம். ஏமாற்றுவேலை. 
 
இணைப்புக்கு அவரை யாரும் அழைக்கவில்லை. முதல்வர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. டிடிவி.தினகரன் தமிழ்நாட்டுக்கு சாபக்கேடு. அவரது கட்சிக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்கவேண்டும். 
 
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்காக வாக்காளருக்கு ரூ.5,000 பட்டுவாடா செய்துள்ளதாக தங்க தமிழ்செல்வன் கூறி உள்ளார், பணம் கொடுத்ததாக அவரால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நான் பொதுவாழ்வில் இருந்து விலக தயார். நிரூபிக்க தவறினால் அவர் விலக தயாரா? என கேட்டுள்ளார்.