1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (18:43 IST)

கஜானாவை காலி செய்த பேர் வழி: கமலை நாரடித்த நமது அம்மா நாளிதழ்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை விமர்சித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மாவில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. 
 
கமல்ஹாசன், இதற்கு முன்னர் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கியவர்தான் கஜானாவை காலி செய்தார் என்று ஜெயலலிதா விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்டிடுப்பது பின்வருமாறு, 
 
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை இது போன்ற கருத்துகளை சொல்வதற்கு தைரியம் இல்லாத கோழையாக இருந்துவிட்டு, இப்போது ஏகத்துக்கும் அதிமுகவையும், ஜெயலிதாவையும் பழிக்கிறார்.
 
கமல்ஹாசனை வைத்து அந்த ஒரு நிமிடம் படம் எடுத்தேன். நான் நிம்மதியை தொலைத்ததே அந்த ஒரு நிமிடத்தில் தான் என்று தலையில் முக்காடு போட்டுக் கொண்டு புலம்பிய மேஜர் சுந்தர்ராஜன், தமிழ் திரையுலகத்தால் முதலாளி என்று அழைக்கப்பட்ட ரைக்டர் ஸ்ரீதர், இவரை வைத்து நானும் ஒரு தொழிலாளி படம் எடுத்து, நடுத்தெருவுக்கு வந்த கதை. 
ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான் என்று கலைப்புலி தாணுவை கடனில் தள்ளி கண்ணீர் கசிய வைத்தது. மன்மத அம்பு என்று படம் எடுத்து, மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த ஜெமினி பிலிம்ஸ்.
 
கலைஞன், வெற்றி விழா என இவரை வைத்து படம் எடுத்து நொடிப்பு நிலைக்கு ஆளான நடிகர் சிவாஜி பிலிம்ஸ். முதலாளி என எல்லோராலும் அழைக்கப்பட்ட எஸ்.ஏ.ராஜ்கண்ணுவை மகாநதிக்குள் தள்ளி மூழ்கடித்த மகா கேவலம்.
 
விஸ்வரூபம்-2 மற்றும் தசாவதாரத்தால், ஆஸ்கார் ரவியை அழித்து முடித்தது. குணா படத் தயாரிப்பாளரை குணாவாகவே மாற்றியது. லிங்குசாமியின் மொத்த கையிருப்பையும் ஒற்றை படத்தின் மூலம் உருவி எடுத்தது.
 
எடுக்காத படமாம் மருதநாயகத்தை வைத்து எலிசபெத் ராணியையே ஏமாற்றியது என ஏராளமான தயாரிப்பாளர்களின் கஜானாவை காலி செய்த பேர் வழி பிறரை விமர்சிப்பது இவரது மனநோயைதான் காட்டுகிறது என எழுதப்பட்டுள்ளது.