செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 16 அக்டோபர் 2018 (16:10 IST)

செல்லூர் ராஜு மட்டுமே நன்றியுள்ளவர்: நெகிழும் டிடிவி தினகரன்

அமமுக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அமைச்சர் செல்லூர் ராஜு மட்டுமே இன்னும் கொஞ்சம் நன்றியோடு இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். 
 
சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவில் விரைவில் பெண் தலைமை ஆட்சி ஏற்படும் என கூறியிருந்தார். இது குறித்து தினகரன் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, 
 
அதிமுகவில் விரைவில் பெண் தலைமை ஏற்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது, சரியானதுதான். மற்ற அமைச்சர்கள் நன்றியை மறந்து செயல்படுகின்றனர். ஆனால், அமைச்சர் செல்லூர் ராஜூ மட்டும், இன்றும் கொஞ்சம் நன்றியோடு இருக்கிறார்.
 
இப்போதும், அதிமுக ஒரு பெண்ணின் தலைமையில்தான் செயல்படுகிறது. அதை தெரிந்துதான், செல்லூர் ராஜூ அவ்வாறு கூறியிருப்பார். தமிழக முதலமைச்சரை மாற்ற வேண்டும். 
 
அதோடு, குற்றப் பின்னணி உள்ள, தவறுகள், ஊழல்கள் செய்கின்ற அனைத்து அமைச்சர்களையும் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, ஆட்சியை தூய்மைப்படுத்த வேண்டும். கட்சியை பலப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.