1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Sengottaiyan speak about Schools reopen

பள்ளிக்கூடங்களை திறக்க இது சரியான நேரம் இல்லை! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Tamilnadu
கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்ற அரசின் ஆணையும் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் ”பள்ளிகள் திறக்க இது சரியான நேரம் அல்ல.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார். பள்ளிகள் திறக்கும் முன்னதான தயார் பணிகளை பள்ளிக்கல்வி துறை மேற்கொண்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தியேட்டர்கள் திறப்பது எப்போது? சொன்னதையே சொல்லும் கடம்பூர் ராஜூ!!