1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today Gold Price hike

நாளுக்கு நாள் ஏற்ற இறக்கத்துடன் ஆட்டம் காட்டும் தங்கம் விலை!!

Tamilnadu
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை சற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.
 
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.38,760-க்கு விற்பனையாகிறது. அதன்படி, இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 24 அதிகரித்து  ரூ.4,845 விற்பனையாகிறது. 
அடுத்த கட்டுரையில்
நாயை நாய் என திட்டியதால் 3 வருடம் காத்திருந்து நடந்த கொடூர கொலை!