நான் பாஜகவில் இணைகிறேனா? நீண்ட நாள் குழப்பத்துக்கு விடையளித்த குஷ்பு!
நடிகை குஷ்பு இப்போது காங்கிரஸில் செய்தி தொடர்பாளராக இருந்து வருகிறார்.
சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்த குஷ்பு ஒரு கட்டத்தில் அரசியலில் இறங்கினார். முதலில் திமுகவில் இருந்த அவர் பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அங்கு அவர் இப்போது தமிழ்நாட்டு செய்தி தொடர்பாளராக இருக்கிறார்.
இந்நிலையில் சமீபகாலமாக அவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற கருத்துகளை சமுகவலைதளங்களில் பகிர்ந்து வந்தார். இதனால் அவர் பாஜகவில் இணைய போவதாக செய்திகள் வெளியாகின. அதுகுறித்து இன்று பேசியுள்ள குஷ்பு ‘அந்த செய்தியில் உண்மையில்லை ‘ எனக் கூறியுள்ளார்.