செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (12:58 IST)

புதிய கல்வி கொள்கை.. 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வா? – அமைச்சர் பதில்!

புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ள நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசின் புதிக கல்விக் கொள்கை திட்டம் தமிழகத்தில் ஏகப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது, தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என முதல்வர் கூறியுள்ளார். இதற்கு பலர் நன்றி தெரிவித்துள்ள நிலையில் மொத்தமாகவே புதிய கல்விக் கொள்கையை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்மொழி கொள்கை மட்டுமே தமிழக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் உள்ளது போல தமிழகத்திலும் 3,5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது. தற்போதைய நிலையே தொடரும் என விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்ய தமிழகத்தில் கல்வியாளர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  கல்வி குழுவின் ஆலோசனைக்கு பிறகே புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.