1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (10:51 IST)

முழு கல்வி கட்டணம் கேட்டால் நடவடிக்கை! – மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நிர்வாகம்!

தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் செயல்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க தொடங்கியுள்ளன.

தனியார் பள்ளிகள் முந்தைய ஆண்டு கல்வி கட்டணங்கள் மற்றும் நடப்பு ஆண்டிற்கான கட்டணங்களை வசூல் செய்ய நீதிமன்றம் விதிமுறைகளை வகுத்துள்ளது. தவணை முறையிலேயே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில் சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பெற்றோர்களிடம் மொத்த தொகையையும் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நிர்வாகம் வரும் 10ம் தேதிக்கு புகார் தெரிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.