1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP L Murugan recommend to accept NEP 2020

மூன்று மொழி கத்துக்க பசங்க ரெடி; ஆனால்..? – எல்.முருகன் வேண்டுகோள்!

Tamilnadu
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை விமர்சிப்பவர்கள் முதலில் அதை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். உலக அளவில் நம் மாணவர்கள் போட்டியிட புதிய கல்வி கொள்கை உதவியாக இருக்கும். அறிவு மற்றும் கற்றல் ஆகியவை அனைவருக்கும் பொது என்பதே இக்கொள்கை வலியுறுத்துகிறது. ஏழை, பணக்காரன், அரசு பள்ளி, தனியார் பள்ளி என்ற பாகுபாடுகளை களைந்து அனைவருக்கும் தரமான உயர்வான கல்வியை நிறுவுவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “மூன்றாவதாக ஒரு மொழியை பயில மாணவர்கள் ஆர்வமும், விருப்பமும் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கூடுதல் பட்ஜெட்டில் வெளியானது கூகுள் பிக்சல் 4ஏ: விவரம் உள்ளே...