கோவில்கள் திறக்கப்படுவது எப்போது? அமைச்சர் பதில்!
தமிழகத்தில் எப்போது கோவில்கள் திறக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் எப்போது கோவில்கள் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது, கொரோனாவால் ஒரு உயிர்கூட பறிபோகாத நிலை வரும் போது, தமிழகத்தில் கோயில்கள் திறக்கப்படும். கொரோனா பரவலால் கோவிலில் பக்தர்க்ளுக்கு மட்டுமே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.