செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (08:52 IST)

2019 ல் ஓய்வுபெற்றிருப்பேன்… ஆனால் அது நடக்கவில்லை – ராஸ் டெய்லர்!

தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நியுசிலாந்து தயாராகி உள்ளது.

தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் மூத்த வீரர்கள் பட்டியலில் நியுசிலாந்தின் ராஸ் டெய்லர் ஒருவர். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தங்கள் அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றதில் அவரின் பங்கு முக்கியமானது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய டெய்லர் ‘இறுதிப்போட்டியில் தோற்றது மோசமான அனுபவம். அந்த போட்டியில் வென்று கோப்பையை வென்றிருந்தால் ஓய்வுபெற்றிருக்கலாம். ஆனால் இப்போது உங்கள் முன் நிற்கிறேன். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட ஆர்வமாக காத்திருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.