தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் இயக்குனராகும் பிருத்விராஜ்! மகள் சொன்ன கதையின் ஊக்கத்தால்!
- 2019 ல் ஓய்வுபெற்றிருப்பேன்… ஆனால் அது நடக்கவில்லை – ராஸ் டெய்லர்!
- கருப்பு பூஞ்சை பாதிப்பு… மூன்று சிறுமிகளின் கண்கள் நீக்கம்!
- IND vs NZ: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று !!
- கடந்த மாதம் 500, இந்த மாதம் 12: சென்னையில் குறைந்த கொரோனா கட்டுப்பாடு பகுதிகள்!
2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பலிகள் – இந்திய நிலவரம்
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ள நிலையில் தினசரி பலி எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 62,480 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,97,62,793 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 1,587 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3,83,490 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,97,62,793 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 7,98,656 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 26,89,60,399 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
