ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (09:00 IST)

தமிழகத்திற்கு மேலும் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள்

தமிழகத்திற்கு மேலும் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் ஹைதராபாத்திலிருந்து  விமானத்தில் சென்னை வந்தது.

 
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா பைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது.இதையடுத்து தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. பொதுமக்களும் ஆா்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனா்.இதனால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.
 
எனவே தமிழ்நாடு அரசே நேரடியாக மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் பேசி,தடுப்பூசிகளுக்கு ஆாடா் கொடுத்து தடுப்பூசிகளை தமிழகத்திற்கு  வரவழைக்கின்றன. அந்தநிலையில் தமிழகத்திற்கு மேலும் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள் 13 பார்சல்களில் ஹைதராபாத்திலிருந்து புளூ டார்ட் கொரியா்  விமானத்தில் சென்னை பழைய விமானநிலையம் வந்தடைந்தது.விமானநிலைய ஊழியா்கள் அந்த தடுப்பூசி பார்சல்களை விமானத்திலிருந்து இறக்கி,தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனா். அவா்கள் குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து செல்கின்றனா்.