1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Sekar Babu opens up about Maridas arrest

வன்முறை விதை தூவலை அரசு அனுமதிக்காது - சேகர்பாபு பேட்டி

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
வன்முறை விதை தூவலை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என மாரிதாஸ் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி. 

 
மதுரை புதூர் சூர்யாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிதாஸ். யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் மாரிதாஸ் அவ்வபோது சர்ச்சையான கருத்துகளால் விமர்சிக்கப்பட்டும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக மாரிதாஸ் மீது வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
 
அதன்பேரில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் மாரிதாஸை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவரை டிசம்பர் 23 வரை சிறையில் அடைக்க மதுரை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகம் ஒற்றுமையான மாநிலமாக திகழ்கிறது. கருத்துக்கள், கொள்கைகள் பரப்புவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், விஷமத்தை ஏற்படுத்தும் வகையில் வன்முறை விதை தூவலை அரசு ஒரு போதும் அனுமதிக்காது என குறிப்பிட்டுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
விபத்து குறித்து தேவையற்ற யூகங்கள், விவாதங்கள் வேண்டாம்! – விமானப்படை வேண்டுகோள்!