செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 நவம்பர் 2021 (12:52 IST)

துணியை வைத்து சிசிடிவி கேமரா மறைப்பு! – அர்ச்சகர்கள் பணியிட மாற்றம்!

திருத்தணி கோவிலில் சிசிடிவி கேமராவை துணியால் மறைத்த அர்ச்சகர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருத்தணி கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் இருவர் ஆளில்லாத சமயம் சிசிடிவியை துணியால் மறைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கையில் ஒரு துணி முடிச்சு இருந்த நிலையில் எதற்காக துணியால் சிசிடிவியை மறைத்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இரு அர்ச்சகர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.