திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (11:13 IST)

சுற்றுலா துறையுடன் இணைந்து ஆன்மீக சுற்றுலா திட்டம்! – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலா துறை இணைந்து ஆன்மீக சுற்றுலா திட்டத்தை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியமைத்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சேகர்பாபு, கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது சுற்றுலா குறித்து பேசியுள்ள அவர் “பராமரிப்பில்லாத திருக்கோவில்களை கண்டறிந்து புணரமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் சுற்றுலா துறையுடன் இணைந்து பக்தி சுற்றுலா திட்டத்தையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.