1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. minister ptr says education is good for all

எங்கள் குடும்பம் நல்ல நிலையில் உள்ளதற்கு இதுதான் காரணம்: அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன்

கல்வி
எங்கள் குடும்பம் நல்ல நிலையில் உள்ளதற்கு இதுதான் காரணம் கல்விதான் என அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்துள்ளார்.
 
இன்று மதுரையில் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை பொருளாதார ரீதாயாக அவசியமான ஒன்றாகும், மாணவர்களின் வளர்ச்சிக்கும் இருமொழிக்கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது.
 
ஏழை, எளிய மக்களை முன்னேற்ற முதல் பாதையும், தெளிவான பாதையையும் கல்வி மட்டுமே காட்டும். கல்வியே பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வழி காட்டும். கல்வியினால் வரும் முன்னேற்றம் மற்றும் பாதுபாப்பு வேறு எதிலும் வராது.
 
கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் தான் நானும் எனது குடும்பமும் இந்த நிலையில் உள்ளோம். சமுதாயத்தில் அனைவரும் கல்வி கற்றால் மட்டுமே சிறப்பான வளர்ச்சியை தமிழ்நாடு பெற முடியும்”
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி!.. ரூ.19,850 கோடி நலத்திட்டங்கள் தொடக்கம்..!