வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (15:25 IST)

மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோவில் சிறப்பு..!

மதுரை நகரமே கோவில் நகரம் என்ற நிலையில் மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயில் பெரும் சிறப்பு பெற்றது
 
இந்த பிறவியில் செய்த பாவங்களை இந்த பிறப்பிலேயே மன்னித்து நன்மை தருவதால், இக்கோயில் மூலவர் சொக்கநாதரை இம்மையிலும் நன்மை தருவார் என்று பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.
 
மதுரை நகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி - மேலமாசி வீதி சந்திப்பில் இந்த கோவில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கம், கீழ்புறத்தில் சிவன் - பார்வதி காட்சியளிக்கின்றனர். 
 
இந்த கோவில் பூலோக கைலாயம் எனவும் அழைக்கப்படும். இக்கோவிலின் மூலவர் பெயர் சொக்கநாதர். அம்பாள் பெயர் மத்தியபுரி நாயகி. உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தர் ஆவார். தல விருட்சம் வில்வம் மரம் ஆகும். இக்கோயில் மேற்கு திக்கு நோக்கி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran