ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 30 டிசம்பர் 2023 (13:25 IST)

நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு

தென்மாவட்டங்களில் பெய்த அதிகனமழையால் நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, சென்னை ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான பாதிக்கப்பட்டன.

இங்கு பெய்த வரலாறு காணாத மழையால் கடும் வெள்ளம் சூழ்ந்து, குடியிருப்புகளை விட்டு மக்கள் வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

தமிழக அரசு துரிதமாகச் செயல்பட்டு மக்களை காப்பாற்றியதுடன் தேவையான அத்தியாவசிய உதவிகள் செய்து கொடுத்தது.

இதேபோல், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய  தென்மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

இதில், வட மாவட்டங்களில் தேர்வு தேதியைஉ  மாற்றி தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் தென்மாவட்டங்களில் தேர்வுகள் இன்னும் நடத்தப்படவில்லை.

எனவே அரையாண்டுத் தேர்வானது விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின் நடத்தப்படும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலககர் இன்று அறிவித்துள்ளார்.

அதில்,  6 முதல் 10 வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜனவரி 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதிவரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.