செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 28 ஜூன் 2023 (12:26 IST)

ஆளுநர் விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணிக்கின்றாரா? உண்மை என்ன?

Ponmudi
இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கும் நிலையில் இந்த விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 
 
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று பிற்பகல் 12:30 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ரவி கலந்து கொள்ளும் இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்த நிலையில் ஆளுநர் ரவி பங்கேற்கும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியது.
 
ஆனால் தற்போது அமைச்சர் பொன்முடி முதலமைச்சர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளதாகவும் அதனால்தான் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran