1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (10:31 IST)

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்: இன்று முதல் விண்ணப்பம் என அறிவிப்பு..!

Veterinary University
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் வரும் 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்!
 
 இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவதுள்: தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் மூலம் இன்று அதாவது ஜூன் 12  காலை 10 மணி முதல் ஜூன் 30 மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகின்றன. 
 
அயல்நாட்டு வாழ் இந்தியர், அயல்நாட்டு வாழ் இந்தியரின் குழந்தைகள், அயல்நாட்டு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல் நாட்டினர் ஆகியோர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த தகவல்கள் http://adm.tanuvas.ac.in  என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran