1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஜூன் 2023 (16:56 IST)

திமுக ஆட்சி கலைந்தால் மக்கள் சந்தோஷப்படுவார்கள்: ஜெயக்குமார் பேட்டி..!

திமுக ஆட்சி கலைந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறினார்.
 
திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு கவர்னர் தேவை இல்லை என்றும் அந்த ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும் என்றும் அவர் தெரிவித்தார். திமுக ஆட்சியை தவிர்ப்பதற்காக சகுனி மற்றும் துச்சாதனன் அவர்கள் கட்சியிலேயே இருக்கிறார்கள் என்றும் மற்ற கட்சியினரோ கவர்னரோ ஜனாதிபதியோ இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார் 
 
இந்த ஆட்சியில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளது என்றும் விலைவாசி ஏறி உள்ளது என்றும் அதனால் ஆட்சிக்காலயம் என்றும் அவ்வாறு ஆட்சி கலைந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் தெரிவித்தார். 
 
ஆட்சி கலைப்பு என்பது திமுகவுக்கு ராசியான ஒன்று என்றும் ஏற்கனவே கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது என்றும் அதேபோல் மீண்டும் திமுக ஆட்சியை கலைக்கப்படும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார் மூன்று புள்ளி
 
Edited by Mahendran