வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 ஜூன் 2023 (15:01 IST)

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை: ஆளுனரி சந்திக்கும் அதிமுக நிர்வாகிகள்..!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மற்றும் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து ஆளுநரை சந்தித்து அதிமுக மூத்த நிர்வாகிகள் மனு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் இன்று மாலை 4 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
 இந்த சந்திப்பின்போது அதிமுக நிர்வாகிகள் மனு அளிக்க இருப்பதாகவும் அதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மற்றும் செந்தில் பாலாஜி விவகாரங்கள் குறித்த தகவல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
அதிமுகவினர் அளிக்கும் மனுவுக்கு கவர்னர் எந்த விதமான நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் மூன்று புள்ளி
 
Edited by Siva