1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Ma Subramanian says about night lockdown

தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கா? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை!

ஊரடங்கு
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து வரும் முப்பத்தி ஒன்றாம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை செய்து அதன்பின் அறிவிப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. 
 
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் வரும் 31-ஆம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரவு நேர ஊரடங்கு தேவையா? என்பது குறித்து ஆலோசனை செய்வார் என்றும் இந்த ஆலோசனைக்கு பின்னர் இரவு நேர ஊரடங்கு குறித்து அவர் முடிவு செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!