புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (14:41 IST)

அந்த விஷயத்தில் திமுகவை முந்த முடியாது! – அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தது தவறு என மு.க.ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி தரும் வகையில் பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

சமீபத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசு கமிஷன் அடிப்படையில் செயல்படுவதாகவும், அதிமுக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை உதைக்க வேண்டும் எனவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு அதிமுகவினர் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ”ஸ்டாலின் அவரது முதுகை திரும்பி பார்க்க வேண்டும். அதிமுக ஊழல் செய்வதாக குறிப்பிடும் இவர்தான் 1996ல் சென்னையில் 1 கோடி ரூபாய் செலவில் கட்ட வேண்டிய மேம்பாலத்துக்கு 1.50 கோடி ரூபாய் செலவு செய்தார். தமிழகத்தில் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் திமுகவை யாரும் முந்த முடியாது” என பேசியுள்ளார்.