தொடர்புடைய செய்திகள்
- எம்ஜிஆரால் தான் அண்ணா முதலமைச்சரானார்! – ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி!
- ரஜினி வீட்டை முற்றுகையிடும் போராட்டம்! – போலீஸார் குவிப்பு!
- பாஜகவை கழட்டி விடுகிறதா அதிமுக? ஆட்டுன மாவையே ஆட்டிய ஜெயகுமார்
- டிக்டாக் தோழியுடன் எஸ்கேப் ஆன கணவர்: மனைவி போலீஸில் புகார்!
- ரஜினியை பாத்து பயப்பட நாங்க திமுக இல்ல! – அமைச்சர் ஜெயக்குமார் நறுக் பதில்!
பாஜக கூட்டணியிலிருந்து எங்களை பிரிக்க முடியாது! – அந்தர் பல்டி அடித்த அமைச்சர்!
பாஜகவிடமிருந்து பிரிய நேரம் பார்த்து வருவதாக அதிமுக அமைச்சர் பேசியிருந்த நிலையில் தற்போது தானாகவே முன்வந்து கூட்டணியை பிரிக்க முடியாது என பேசியுள்ளார்.
கடந்த மக்களைவை தேர்தலில் கூட்டணி அமைத்த பாஜக – அதிமுக தொடர்ந்து இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் முதற்கொண்டு தங்களது கூட்டணியை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றுஇல் பேசிய அதிமுக அமைச்சர் பாஸ்கரன் ”தமிழக அமைச்சரவையிலேயே பலர் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாஜகவை விட்டு பிரிய நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என பேசியுள்ளார்.
அவரது இந்த பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என அதிமுக தரப்பில் கூறப்பட்டிருந்தது. அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் சிலர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுகவை யாராலும் பிரிக்க முடியாது என பேசியுள்ளார்.
அமைச்சர் இப்படி பல்டியடித்து பேசியிருப்பது மேலிடத்தின் கண்டிப்பினால்தான் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. எனினும் அமைச்சர் மாற்றி மாற்றி பேசுவது குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
