வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (12:51 IST)

எம்ஜிஆரால் தான் அண்ணா முதலமைச்சரானார்! – ஒரே போடாக போட்ட ராஜேந்திர பாலாஜி!

எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா முதலமைச்சராக காரணமே எம்ஜிஆர்தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் அதிமுக அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது. விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ”அண்ணா பக்கத்தில் எம்ஜிஆர் இருந்ததால்தான் அண்ணா இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டு முதல்வரனார்” என பேசியுள்ளார்.

எம்.ஜி.ஆர் அன்று தன் படங்களில் ஒரு வரியாவது அண்ணாவை பற்றி வசனம் வைக்காமல் இருக்க மாட்டார். எம்ஜிஆர் அரசியல் பயணத்துக்கு அண்ணாவே பெரும் முன்னொடியாக விளங்கியதாக எம்ஜிஆரே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அப்படிப்பட்ட அண்ணா முதலமைச்சரானதே எம்ஜிஆரால்தான் என அமைச்சர் பேசியுள்ளது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.