தொடர்புடைய செய்திகள்
- விடிய விடிய பெய்த கனமழையால் சதுரகிரியில் வெள்ளம்: பக்தர்களை கயிறு மூலம் மீட்ட மீட்புப்படை..!
- மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: தமிழ்நாடு காவல்துறை
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு
- அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் இணைத்து கொள்ள அமலாக்கத்துறை மனு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!
- அமலாக்கத்துறை குறி வைக்கும் அடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனா? புதிய மனு தாக்கல்..!
வெள்ளத்தில் சிக்கி தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.. 3 நாட்களுக்கு பிறகு மீட்பு;
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்று நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளது என்பதும் இன்னும் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதாகவும் மீட்பு படையினர் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஏரல் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிக்கி கொண்ட நிலையில் அவரை மீட்க மீட்பு படையினர் போராடினர். 3 நாட்களுக்கு பிறகு தற்போது தான் அவர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒரு அமைச்சரே மூன்று நாட்கள் தனது வீட்டில் சிக்கிக்கொண்ட நிலையில் அவரை தற்போது தான் மீட்பு படையினர் மீட்டு உள்ளனர் என்றால் பொதுமக்களின் நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள முடிவதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
