மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: தமிழ்நாடு காவல்துறை
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மற்றும் காற்றின் கீழ்டுக்கு சுழற்சி ஆகியவை காரணமாகவும் வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழகம் முழுவதும் இன்னும் சில நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மழை பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள 18 பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், உட்பட 30 பேர் கொண்ட ஒவ்வொரு பேரிடர் மீட்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மழை பாதிப்பு தற்போது அதிகம் உள்ள கோவை நெல்லை மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
Edited by Mahendran