1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. meesai rajendiran quit from dmdk

தேமுதிகவிலிருந்து விலகிய மீசை ராஜேந்திரன்!.. இதுதான் காரணமா?

meesai
விஜயகாந்தின் தீவிர ரசிகர் மீசை ராஜேந்திரன். சாமி திரைப்படம் மூலம் இவர் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.. அந்த படத்திற்கு பின் பல படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.. சில படங்களில் வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாகவே மீசை ராஜேந்திரன் நடிப்பார். அவரின் உருவத்திற்கும், மீசைக்கும் அந்த கதாபாத்திரம் சரியாக பொருந்தும்.

விஜயகாந்தின் தீவிர விசுவாசி இவர். அவருடன் பல வருடங்கள் பயணித்தவர்.. விஜயகாந்த் கட்சி துவங்கிய போது தன்னை தேமுதிகவில் இணைத்து கொண்டார்.. மூன்று முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். விஜயகாந்த் மறைந்த போது அவ்ரை பற்றி பல தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்தார் மீசை ராஜேந்திரன்..

இந்நிலையில்தான், திடீரென்று தேமுதிகவிலிருந்து விலகுவதாக மீசை ராஜேந்திரன் அறிவித்திருக்கிறார்.. இது தொடர்பாக பிரேமலதா கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கும் அவர் கடிதம் அனுப்பியிருக்கிறார்.. இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு விளக்கமளித்த மீசை ராஜேந்திரன் ‘நான் 31 வருடங்கள் கேப்டனின் ரசிகர் மன்றத்தில் இருந்திருக்கிறேன். 20 வருடங்கள் தேமுதிகவில் பயணித்திருக்கிறேன்.. ஆனால் தற்போது தேமுதிக தலைமை நடந்து கொள்வது எனக்கு பிடிக்கவில்லை.. கேப்டன் குடும்பத்தின் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால், இப்போது அங்கே நிலைமை சரியில்லை.. இவ்வளவு வருடம் இருந்தும் எனக்கு சரியான அங்கீகாரம் அங்கே கிடைக்கவில்லை.. அதனால் கட்சியிலிருந்து விலகுகிறேன்’ என தெரிவித்திருக்கிறார்..

மூன்று சட்டமன்ற தேர்தலில் மீசை ராஜேந்திரனுக்கு வாய்ப்பு கொடுத்த தேமுதிக தற்போது நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் சீட் கொடுக்காததால் மீசை ராஜேந்திரன் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
டிகிரி கூட இல்லை.. ஆனால் BMW நிறுவனத்தில் வேலை.. கைநிறைய சம்பளம்.. 19 வயது இளம்பெண்ணின் சாதனை..!