1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (16:05 IST)

தோசையில் சாதி ; வாயை விட்டு மாட்டிக்கொண்ட மதிமாறன் : தெறிக்கும் மீம்ஸ்

சாப்பிடும் தோசையில் கூட சாதி இருப்பதாக பெரியாரிஸ்ட் மதிமாறன் பேசிய விவகாரம் சமூக வலைத்தலங்களில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.


சர்கார் விழாவில், விஜய் அரசியல் கலந்த வசனத்தை பேசியதை அடுத்து, ஒரே தளபதிதான் அது ஸ்டாலின் மட்டும்தான் எனப்பேசி விஜய் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டவர்தான்  இந்த மதிமாறன்.
 
ஒரு மேடையில் பேசிய அவர் “ஆரியர்கள் தோசையை மெலிதாக நெய் ஊற்றி சாப்பிடுகின்றனர். ஆனால், தாழ்த்தப்பட்டவர்கள் கல் தோசை போல் ஊற்றி சாப்பிடுகின்றனர். இப்படி உண்ணும் தோசையில் கூட சாதி கட்டமைக்கப்பட்டுள்ளது” எனப்பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


மதிமாறனின் பேச்சை பலரும் கிண்டலத்து மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். அப்படி வைரலாக பரவி வரும் சில மீம்ஸ் உங்கள் பார்வைக்கு....