ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 24 அக்டோபர் 2018 (17:31 IST)

நல்ல வேளை மீம்ஸ் போட்டு தாளித்திருப்பார்கள் - விஜய் சேதுபதி

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ’கூகை திரைப்பட இயக்கம்’ ஏற்பாடு செய்திருந்த ’96’ படக்குழுவினரின், உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு கூகை நூலகத்தில் அண்மையில் நடந்தது.

 
இந்த நிகழ்ச்சியில், விஜய்சேதுபதியிடம், புதிதாக கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் நீங்கள் கதை கேட்பதில்லை என்று கூறப்படுகிறதே? என்று செய்தியாளர்கள் கேட்டனர், அதற்கு விஜய்சேதுபதி கூறியதாவது:
 
இது பொய்யான தகவல்.  என் ஆபீசுல என்னை எப்போது வந்தாலும் பார்க்க முடியும். எனக்கு எந்த தேதி வரைக்கும் படம் இருக்கு.  எப்ப படம் பண்ண முடியும். கதை கேட்க முடியுமா? கேட்டாலும் அதை பண்ண முடியுமா என்பது உள்ளிட்ட பதிலை கண்டிப்பாக சொல்லுவேன். 
ஏற்கனவே வாரா வாரம் படம் வருகிறது என்று மீம் போட்டு என்னை தாளித்து விடுகிறீர்கள். நல்லவேளை வடசென்னையில் அமீர் கேரக்டரை நான் பண்ணவில்லை. இல்லையென்றால் 3 வாரமும் என் படம்தான் என்று சொல்லியிருப்பீர்கள்.
 
இவ்வாறு விஜய் சேதுபதி பதிலளித்தார்.