திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (17:35 IST)

அது போன வாரம்.. இது இந்த வாரம் : அழகிரியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

திமுக தலைவராக ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள தயார் என அழகிரி கூறியதை அடுத்து நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை உருவாக்கி அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

 
இதுநாள் வரை ஸ்டாலினையும், திமுகவையும் நேரிடையாக விமர்சித்து வந்த அழகிரி இன்று அந்தர் பல்டி அடித்துள்ளார்.
 
இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அழகிரி “திமுகவில் மீண்டும் இணைய நான் விரும்புகிறேன். ஆனால், ஸ்டாலின் என்னை சேர்த்துக்கொள்ள மறுக்கிறார். கட்சியில் இணைந்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்” எனக் கூறினார். 

 
இதற்கு முன்புவரை, திமுகவில் கருணாநிதி மட்டும்தான் தலைவர் என கூறிவந்த அழகிரி, தற்போது திமுக தலைவராக ஸ்டாலினை ஏற்க தான் தயாராக இருப்பதாக கூறியிருப்பது திமுகவில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்நிலையில், அழகிரியின் தற்போதைய நிலைப்பாட்டை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வருகிறது.