1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Medical team request 2 weeks extention for lockdown

தமிழகத்தில் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுமா ஊரடங்கு?

CoronaVirus
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் பழனிசாமியிடம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,865 லிருந்து 6,412 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 169 லிருந்து 199 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 478 லிருந்து 504 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 834 பேரும், டெல்லியில் 720 பேரும், ராஜஸ்தானில் 463 பேரும், தெலுங்கானாவில் 440 பேரும், கேரளாவில் 357 பேரும், ஆந்திராவில் 348 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் தமிழகம் பாதிப்படைந்த மாநிலத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பதால், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க முதல்வர் பழனிசாமியிடம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. 
 
எனவே, முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
கொரோனா வைரஸையும் மீறி தேர்தலில் வாக்களிக்கும் தென் கொரிய மக்கள்