வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 9 ஏப்ரல் 2020 (15:43 IST)

ஆதரவற்றோருக்கு அக்‌ஷய பாத்ரா மூலம் உணவளித்த நடிகர் ஹிருத்திக் ரோஷன்!

பாலிவுட் சினிமாவின் மிகசிறந்த நடிகர்களுள் ஒருவரான ஹிருத்திக் ரோஷன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான, விசித்திரமான நடிப்பை வெளிப்படுத்தி இந்திய சினிமாவை உலகெங்கும் உள்ள ரசிகர்களை திரும்பி பார்க்க செய்திடுவார். இதனாலே அவருக்கு உலகம் முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது.

இவர் கடந்த 2000-ம் ஆண்டில் ஃபேஷன் டிசைனிங் துறையைச் சேர்ந்த சுசன்னே என்பவரை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உண்டு. இத்தற்கிடையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2014-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து தனது குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்தார் ஹிருத்திக் ரோஷன்.

சுமார் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் தன் முதல் மனைவி சுசன்னே ஹிருத்திக் கொரோனா வைரஸ் காரணமாக தனது குழந்தைகள் தனிமையாக இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாததால்  ஹிருத்திக்கின் வீட்டுக்கு வந்த தனது மகன்களுக்கு வசித்து வருகிறார். இந்த நிலையில் தற்ப்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆதரவற்ற 1.2 லட்சம் பேருக்கு அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உணவு வழங்க முன்வந்துள்ளார்.

இதற்காக ஹிருத்திக் ரோஷனுக்கு  அந்த தொண்டு  நிறுவனதற்கு பதிலளித்த அவர்,  “நாட்டில் யாரும் பசியுடன் தூங்குகிறார்களா? என்பதை அறியும் சக்தி உங்களுக்கு கிடைக்க வேண்டும். களத்தில் இருக்கும் நீங்கள்தான் சூப்பர் ஹீரோக்கள். யாருடைய பங்களிப்பும் சிறியதோ பெரியதோ அல்ல” நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்வோம். என்று கூறி பதிவிட்டுள்ளார்.