தொடர்புடைய செய்திகள்
- முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் திடீர் மாற்றம்: அதிமுகவில் பரபரப்பு
- கிராம சபை கூட்டம் திடீர் ரத்து: தமிழக அரசின் அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்
- திமுக கொள்கை பரப்புச் செயலாளராக லியோனி அறிவிப்பு!
- இன்றைய முதல்வரே.. நாளைய முதல்வர் வேட்பாளரே! – மதுரையில் போஸ்டர்!
- U-Turn அடித்த அதிமுக அரசு; மடக்கி பிடித்த உதயநிதி!!
திமுகவில் இணைகிறதா மதிமுக? வைகோவின் அதிரடி முடிவு!
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. குறிப்பாக திமுகவில் இணையும் கூட்டணி கட்சிகள் கண்டிப்பாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் உடன்படாது என்றாலும் மற்ற கட்சிகள் கட்டாயப்படுத்தப்படும் என்று தெரிகிறது. குறிப்பாக விசிக மற்றும் மதிமுக கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அவர்கள் வெற்றி பெற்றாலும் திமுக எம்.எல்.ஏக்களாகதான் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர்கள் இனியும் அந்த சின்னத்தில் நிற்பதற்கு பதிலாக கட்சியை திமுகவுடன் இணைந்து விடலாமே என்று மூத்த தலைவர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். இது குறித்து வைகோவும் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் திமுகவில் மதிமுக இணைய திமுகவின் மூத்த தலைவர்களுடன் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலிம் திமுகவில் முன்னிறுத்தி வந்துகொண்டிருக்கும் நிலையில் மதிமுகவை இணைத்தால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்று மதிமுக தனியாகவே இருக்கட்டும் ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடட்டும் என்று திமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்
எனவே தனிக் கட்சியாக இருந்தாலும், திமுகவின் ஒரு கிளை கட்சியாகவே மதிமுக தொடர்ந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
