திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (12:27 IST)

இன்றைய முதல்வரே.. நாளைய முதல்வர் வேட்பாளரே! – மதுரையில் போஸ்டர்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ள பரபரப்பு அடங்குவதற்குள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்துள்ளது. இதுகுறித்து 7ம் தேதி தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுவரை அமைச்சர்களும், அதிமுகவினரும் பொதுவெளியில் கட்சி சார்ந்து எதுவும் பேச வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு அணி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த முதல்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.