1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2020 (07:23 IST)

முதல்வர் வேட்பாளர் அறிவிப்பில் திடீர் மாற்றம்: அதிமுகவில் பரபரப்பு

கடந்த சில மாதங்களாகவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இதுகுறித்து அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அனேகமாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் தனக்கு இல்லை என்றால் அதிமுக பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்றும் ஓபிஎஸ் கேட்டு அடம் பிடிப்பதாகவும், இதற்கு ஈபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகிய இருவருக்கும் இடையே உடன்பாடு எதுவும் ஏற்படாததால் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
எனவே அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு வரும் 7ம் தேதி வெளியாகாது என அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது