செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (11:23 IST)

U-Turn அடித்த அதிமுக அரசு; மடக்கி பிடித்த உதயநிதி!!

பள்ளிக்கல்வித்துறை மாற்றி மாற்றி அறிவிப்பு செய்து மாணவர்கள் மீது மனோரீதியான தாக்குதல் நடத்துகிறது என உதயநிதி விமர்சனம்.
 
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து திடீரென அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்று வெளியான அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், அக்.1 முதல் பள்ளிகள் திறப்பென அறிவித்த அடிமை அரசு திறக்கவில்லை என்று மீண்டுமொரு U-Turn அடித்துள்ளது. அம்மையார் காலத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர்கள்தான் தூக்கியடிக்கப்பட்டனர். அடிமை அரசோ பள்ளிக்கல்வித்துறையையே பந்தாடுகிறது. கற்றறிந்த அதிகாரிகளாவது மாணவர் எதிர்காலம் காக்க வேண்டும்.
 
பொய் சொல்லக்கூடாது-மாற்றி பேசக்கூடாது என்பது பாலபாடம். ஆனால் பள்ளிக்கல்வித்துறையே மாற்றி மாற்றி அறிவிப்பு செய்து மாணவர்கள் மீது மனோரீதியான தாக்குதல் நடத்துகிறது என விமர்சனம் செய்துள்ளார்.