திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 மார்ச் 2024 (09:25 IST)

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம். மதிமுக பிடிவாதம்.. கூட்டணியில் சிக்கல்..!

உதயசூரியன் சின்னத்தில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்றும் எங்கள் கட்சியின் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று மதிமுக பிடிவாதம் பிடிப்பதால் திமுக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக மதிமுகவிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த பேச்சு வார்த்தையில்  மதிமுக ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்பதாகவும் மக்களவைத் தொகுதியில் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று கூறியதாகவும் ஆனால் திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து மதிமுகவின் தலைவர் அர்ஜுனராஜ் கூறிய போது ’கூட்டணி குறித்து அடுத்த கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்றும் நாங்கள் உதய சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றும் எங்கள் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் திமுக எவ்வளவு தான் நிர்பந்தம் செய்தாலும் அதற்கு மட்டும் நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்றும் கூறியுள்ளார்

இதனை அடுத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியில்லை என்று மதிமுக கூறியிருப்பதால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியே போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Edited by Mahendran