1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (15:07 IST)

அதிமுக எந்தக் கட்சிகளுடன் கூட்டணி? ஜெயக்குமார் முக்கிய தகவல்

அதிமுக எந்தக் கட்சிகளுடன் கூட்டணி என்பது பற்றி 10 நாட்களில் அறிவிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
 
விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி,  நாம் தமிழர், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
 
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகி இனிமேல் அக்கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக தலைமை அறிவித்த நிலையில், சமீபத்தில், பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை புகழ்ந்தார்.
 
இதனால் மீண்டும் இரு கட்சிகள் இடையே கூட்டணி ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
 
இந்த  நிலையில்,மக்களவை  தேர்தல் தொடர்பாக இன்னும் 10  நாட்களில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: கூட்டணிக்காக நாங்கள் யாரும் கெஞ்சவில்லை என கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கருத்தை பார்க்கும்போது, காங்கிரஸ் கூட்டணி உடைவதாகத்தான் தெரிகிறது. அதிமுக தலைமையை  ஏற்று கூட்டணிக்கு வர பல கட்சிகள் தயாராக உள்ளனர். 10 நாட்களில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளது என்பது பற்றி பொதுச்செயலாளர் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.