வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (20:13 IST)

தேர்தலில் எந்த தொகுதியில் போட்டி? அண்ணாமலை கூறிய பதில்

annamalai
விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி,  நாம் தமிழர், சமாஜ்வாடி உள்ளிட்ட மாநில கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
 
இந்த நிலையில்,  அண்ணாமலை தமிழ் நாடு முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு, பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கினார்.
 
சமீபத்தில் இதன் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் நடைபெற்றது.
 
பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியை புகழ்ந்தார். இந்த விழாவில் மக்களவை தேர்தலுக்கான பிரசார தொடக்கவிழாவாகவும் அமைந்தது. 
 
இதையடுத்து, தமிழ் நாட்டில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பாஜக குழு அமைத்தது.
 
இதுகுறித்து, தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலை, ''சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான  பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பிப்னர் ஹெச். ராஜா, தேசிய மகளிர்  அணி தலைவர் வானதி சீனிவாசன், ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவை நிமித்து உத்தரவிட்டிருந்தார்.
 
இந்த நிலையில், ''வரும் மக்களவை தேர்தலில்  எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்? ''என செய்தியாளர்கள்   தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர்.
 
இதற்கு பதிலளித்த அவர், ''கட்சி தலைமை என்னை எந்த இடத்தில் எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன். பரப்புரை மேற்கொள்ள சொன்னால் பரப்புரை மேற்கொள்வேன்'' என்று கூறினார்.
 
மேலும், ''என்னை பொறுத்தவரை எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது; கட்சித் தலைமையின் முடிவுதான் எனது முடிவு ''என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கோவை, அல்லது கரூரில் அண்ணாமலை போட்டியிடலாம் என தகவ்ல வெளியாகிறது.