1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MDMK give fund for srilanka tamil peoples

இலங்கை தமிழர்களுக்கு மதிமுக நிவாரண நிதி! – வைகோ அறிவிப்பு!

Tamilnadu
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசு உதவும் நிலையில், தமிழக அரசுக்கு நிவாரண நிதி அளிப்பதாக மதிமுக அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்கள் பலர் படகுகள் மூலமாக தமிழகத்தை நோக்கி வருவதும் அதிகரித்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள், மக்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இலங்கை தமிழர்களுக்கு உதவ நிதியளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.13.15 லட்சத்திற்கான காசோலையை மதிமுக சார்பில் அதன் ட்பொதுசெயலாளர் வைகோ, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பள்ளிகளில் மதமாற்றம் நடைபெறவில்லை! – தமிழக அரசு விளக்கம்!