தொடர்புடைய செய்திகள்
- இன்று தொடங்கிய அக்கினி வெயில்! – 8 மாவட்டங்களில் சதம் போட்ட வெயில்!
- வலுவடையும் காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!
- 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு முன்கூட்டிய விடுமுறை! – அன்பில் மகேஷ் அறிவிப்பு!
- பேரறிவாளன் விசயத்துல மத்திய அரசு முடிவு எடுக்கலைன்னா…? – உச்சநீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!
- ஆதீன பட்டினபிரவேச நிகழ்ச்சி… முதல்வர் முடிவெடுப்பார்..! – அமைச்சர் சேகர்பாபு!
பள்ளிகளில் கட்டாய மதமாற்றம்..?? – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!
அரசு பள்ளிகளில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த சில நாட்கள் முன்னதாக தஞ்சாவூரில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கு கட்டாய மதமாற்றமே காரணம் என சிலர் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து சமீபத்தில் கன்னியாக்குமரி அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணவர்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக வெளியான புகாரில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
