ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 5 மே 2022 (12:03 IST)

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்று கொடுக்கும் கூகுள்: புதிய ஒப்பந்தம்

Google
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் புதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடன் கூகுள் நிறுவனம் செய்துள்ளது 
 
தமிழக அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் எழுதவும் சரளமாக பேசவும் கூகுள் நிறுவனம் கற்றுக்கொடுக்க உள்ளது
 
இதற்காக Google Read Along புதிய செயலி ஒன்றை உருவாக்கி தமிழக அரசு பள்ளி மாணவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க உள்ளது 
 
இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று தமிழக முதல்வருடன் கூகுள் நிறுவனம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
இதனை அடுத்து இனிவரும் காலங்களில் அரசு பள்ளி மாணவர்கள் சர்வசாதாரணமாக ஆங்கிலம் பேசக் கூடிய அளவில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது